• Mar 23 2023

தளபதி விஜய் படத்தையே டைரக்ஷன் செய்த வடிவேலு...அதனால தான் அந்த காட்சிகள் செம ஹிட் ஆகிச்சா?

Jo / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு இவர் சினிமாவில் சிறிது காலம் நடிக்காமல் இருந்து வந்தார் இந்த நிலையில் தற்போது மீண்டும் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது வடிவேலுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் சங்கர் ஏழுமலை. இவரை கிங் காங் என்று  அழைத்தார்கள் இவர் வடிவேலுக்கு குறித்து பல ஆச்சரியமான தகவல்களையும் அவர் செய்த உதவிகளையும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

வடிவேலுவுடன் சுறா போக்கிரி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் கிங்காங் நடிகர் இவர்கள் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பேட்டியில் பேசிய கிங்காங் படங்களில் நடிக்கும் பொழுது எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் நான் எப்படி டயலாக் பேசினால் அது ரசிகர்களிடையே வைரலாகும் என வடிவேலு டிப்ஸ் கொடுப்பார்.அதிலும் போக்கிரி திரைப்படத்தில் நான் நடித்த காமெடி காட்சிகள் இப்பொழுது கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது அதற்கு காரணம் வடிவேலு தான். 

பிரபுதேவா இயக்கிய போக்கிரி திரைப்படத்தில் வடிவேலுவுடன் கிங் காங் சேர்ந்து ஒரு சில காமெடி காட்சிகளில் நடித்திருந்தார்  அந்த காட்சிகள் ரசிகர்களிடையே வயிறு குலுங்க சிரிக்க வைத்தது அதிலும்  குறிப்பாக லாரி  டிரைவராக வரும் கிங்காங் தண்ணீரை வீணடித்து செல்வதை கண்டித்து அந்த தண்ணீரை அடக்க முயலும் பொழுது செய்யும் காமெடி அலப்பறைகள் இன்றளவு மிகவும் பிரபலமாக இருக்கிறது.

ஆனால் இந்த காமெடி காட்சியை வடிவேலு தான் இயக்கினராம் பிரபுதேவா அவர்களிடம் பேசி அந்த மொத்த காட்சியையும் வடிவேலு டைரக்ட் பண்ணியதாக  கிங் காங் கூறியுள்ளார் வடிவேலு முயற்சியால் தான் அந்த காட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement