யூடியூபில் பிரபலமாக இருக்கும் சிறுவர்களில் ஒருவர்தான் ரித்து. 7 வயது ஆகியுள்ள இச்சிறுவன் rithu rocks என்ற யூடியூப் சேனலில் வித்தியாசமான கெட்டப்பில் காணொளிகளை பதிவிட்டு முன்னணி பிரபலமாக இணையதளத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் சிறுவன் ரித்துவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் முதல் படமாக லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு மகனாக o2 என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
மேலும் இப்படம் வரும் 17ஆம் தேதி ott தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிறுவன் ரித்துவை பேட்டி எடுத்து உள்ளனர்.
அதில் பேசிய ரித்து. நயன்தாரா மேம் உடன் இணைந்து நடித்தது ரொம்பவும் சந்தோசமாக இருக்கு என்று கூறியுள்ளார்.அத்தோடு யூடியூப்பில் நாங்கள் எடுக்கும் காணொளிக்கு சின்ன கேமராவும் 2 லைட் செட்டிங் வைத்துதான் எடுப்பாங்க ஆனால் இங்க பெரிய கேமரா மற்றும் நிறைய லைட் செட்டிங் வச்சி எடுத்தாங்க என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின் அச்சிறுவன் நான் விஜய் சார் ரசிகனாக இருந்தாலும் எனக்கு அஜித் சாரையும் ரொம்ப பிடிக்கும் அவருடைய வலிமை படம் சூப்பரா இருந்துச்சு அதுல அஜித் சார் செய்த பைக் ஸ்டன்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு விஜய் சாரோட படத்துல அவருக்கு பையனா நடிக்கணும் என்று ரொம்ப ஆசை என ரித்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்
- திடீரென திருமணம் …என் கணவர் இப்படித்தான்…பல உண்மைகளை கூறிய கயல் ஆனந்தி
- “எனக்கு ரொம்ப பிடிச்சவங்க வேதனைப்படுத்தினால் மட்டும் தான் வருத்தப்படுவேன்” – ஊர்வசி
- வெண்பா சொன்ன விசயத்தால் ஷாக்கடைந்த குடும்பம்-சரியான பதிலடி கொடுத்த பாரதி-விறுவிறுப்புடன் வெளியான ப்ரமோ…!
- கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. திடீரென வீட்டுக்கு வந்த பாக்கியா..!
- நயன் திருமணத்தை பத்தி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்-கடுப்பான சீமான்..!
- ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிம்புவின் படம்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!