• May 03 2024

விவாதிப்பதற்கு இது நேரமில்லை, தவறான எதையும் பரப்பாதீங்க- மீரா இறப்பு குறித்து 96 பட நடிகை போட்ட டுவிட்

stella / 7 months ago

Advertisement

Listen News!


இன்று காலையிலேயே மனதை கனக்க வைக்கும் அளவுக்கு ஒரு துயர செய்தி வெளியாகி ஒட்டு மொத்த மீடியாவையும் உலுக்கியது. 16 வயதான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் நம்ப முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர். ஆனால் எந்த வார்த்தைகளும் அவரை இந்த வலியில் இருந்து மீட்டுக் கொண்டு வர முடியாது. ஏற்கனவே அவருடைய ஏழு வயதில் தந்தையின் தற்கொலையை பார்த்து கலங்கிப்போன அவருக்கு தற்போது மகள் மூலம் அடுத்த துயரம் நிகழ்ந்துள்ளது.


இதனால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழில், சதுரன், வெற்றிவேல்,96 போன்ற படங்களில் நடித்த நடிகை வர்ஷா போட்டிருக்கும் டுவிட் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் ஒரு நடிகர் தனது மகளை இழந்திருக்கிறார். அந்த குடும்பம் சந்திக்கும் வலியை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது


சமூக வலைத்தளங்களில் மிகுந்த கண்ணியத்துடன் செயல்படவேண்டிய நேரமிது. கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தம்ப்னைல், புகைப்படங்கள், தலைப்புகளை பயன்படுத்தாதீர்கள். இந்த சம்பவம் ஏன் எப்படி நடந்தது போன்றவற்றை விவாதிப்பதற்காக நேரமும் இது இல்லை" என பதிவிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement