• Sep 27 2023

மிஸ் யூ ஆல்.." விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய கடிதம்- போலீஸ் துருவி துருவி விசாரணை

stella / 1 week ago

Advertisement

Listen News!


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இவரின் இறப்புக்கு என்ன காரணம் மன அழுத்தம் என்று கூறப்படுகின்றது.


இப்படியான நிலையில் விசாரணையின் போது ஒரு கடிதம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில்'ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்' என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், பத்து வரிகள் கொண்ட அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாகவும் இந்த கடிதம் மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்பு எழுதியதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..



Advertisement

Advertisement

Advertisement