• May 14 2024

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய சூப்பர் சிங்கர் தேஜூ ஶ்ரீ... இப்படி வளர்ந்திட்டாங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். அதுமட்டுமல்லாது சினிமாவில் அதிக வரவேற்பு பெற்று பாடல்களை பாடியும் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியானது ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாக இடம்பெறும் 

அப்படி தோன்றிய பல குட்டி நட்சத்திரங்களை போல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இல் அறிமுகமாகிய ஒருவர் தான் தேஜூ ஶ்ரீ.


மனநல வளர்ச்சி குறைபாடுகளோடு பிறந்திருந்த தேஜு ஸ்ரீ தன் திறமையால் பாடல்களை பாடி ரசிகர்கள் கவர்ந்ததோடு நெகிழவும் வைத்திருந்தார்.

அப்படி பாடகி சித்ராவின் செல்ல மகளாக நிகழ்ச்சியில் வரவேற்பு பெற்றார். பின்னர் மறைந்த லெஜண்ட் எஸ் பி. பால சுப்ரமணியன் அவர்களை கவர்ந்த சிறுமியாகவும் சூப்பர் சிங்கர் 6 இல் தேஜு ஸ்ரீ விளங்கினார்.

இவ்வாறாக குட்டி குழந்தையாக இருந்த தேஜு ஸ்ரீ வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். அதுமட்டுமல்லாது இவர் க்யூட்டாக பாடியுள்ள வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவினை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement