• Jan 08 2026

தலைவிக்கு தில்ல பாத்தியா! தலைக்கு அடுத்து கார் ரேசில் இறங்கும் தமிழ் நடிகை!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பேசப்படுகின்றன. தனது கேரக்டருக்கு ஏற்றால் போல அவர் தெரிவு செய்யும் படங்கள் அவர் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைகிறது.  


இந்நிலையில், அஜித்தை கார் ரெஸின்களில் கலந்து கொள்வது குறித்து ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வந்தது. அவரை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், கார் ரேஸிங் குறித்த விஷயங்களை கேட்டறிந்து, அதற்கேற்ப உடை அணிந்து கார் ரேஸ் போட்டியில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன. மேலும், இந்த பதிவில் "அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குகிறேன்" என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது. குறிப்பாக குஷ்பூ, சாந்தனு, பவித்ரா லட்சுமி, ராதிகா சரத்குமார், சோம் சேகர், ஐஸ்வர்யா, லட்சுமி ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பதிவிற்கு லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement