• Jan 19 2025

பாக்கியாவுக்கு கல்லால் அடிக்க சென்ற கஸ்டமர்.. அவமானத்தின் உச்சில் நடந்த சம்பவங்கள்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கெட்டுப்போன  உணவை கொடுத்ததாக ஈஸ்வரி ரெஸ்டாரண்டரை முற்றுகை இடுகின்றார்கள். மேலும் இந்த செய்தி பற்றி டிவிகளில் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

இதனை அறிந்த ஈஸ்வரியும் இனியாவும் அழுது கொண்டிருக்க தன்னால்தான் இப்படி எல்லாம் நடந்ததாக ஈஸ்வரி சொல்லி புலம்புகின்றார். அதன் பின்பு செழியன் ரெஸ்டாரன்ட்க்கு செல்ல அங்கு கோபி இவற்றையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆனால் செழியன் வந்ததும் தான் தகவல் அறிந்து தான் வந்ததாகவும் அம்மாவை போய் பார்க்கும் மாறும் ஆறுதல் சொல்லி அனுப்புகின்றார். சண்டை போடுபவர்களை சமாளிக்க முற்படும் போது அதில் ஒருவர் கல்லை தூக்கிக்கொண்டு அடிக்க வருகிறார். இன்னொருவர் தனது பிள்ளை ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்லிக் கதறுகின்றார்.


மறுபக்கம் இதை அறிந்த அமிர்தாவும் எழிலுக்கு போன் பண்ணி சொல்ல அவரும் அங்கு சென்று விடுகின்றார். அதன் பின்பு பழனிச்சாமியின் வந்து போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் கூட்டத்தை கலைக்க பார்க்கின்றார்கள். அங்கு வந்திருந்த கஷ்டமர்ஸ் கடும் கோபத்தில் இருக்க, உங்களுடைய காசுகளை எல்லாம் இரண்டு நாட்களுக்குள் செட்டில் பண்ணி விடுவதாக பாக்கியா வாக்கு கொடுத்து ஒருவழியாக அனுப்புகிறார்.

அதன்பின்பு பாக்கியா வேலையாட்கள் எல்லாரையும் அழைத்து பேச  அதில் செப்க்கு திடீரென கால் வருகிறது. இதனால் தான் போக வேணும் என நைசாக எஸ்கேஎப் ஆகிறார். அவர் போனதும் அங்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் உணவுகளை செக் பண்ணும் போது அதில் கறி பழுதாக இருப்பதை கண்டுபிடிக்கின்றார்கள். இதனால் பாக்கியாவுக்கு ரெஸ்டாரண்ட் நடப்பது என்னவென்று தெரியவில்லை என்று சொல்லி அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பைன் அளித்து 3 நாட்களுக்கு ரெஸ்டாரண்ட்டை சீல் வைத்து செல்லுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement