• Jul 10 2026

தமிழ்ல வேலை செய்யாதுனு சொன்னாங்க.. அழுது கொண்டே பேசிய சுதா கொங்கரா.! நடந்தது இதுதான்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுவரும் புதிய படங்களில் ஒன்றாக “நூறு சாமி” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, திரையரங்குகளில் படம் மெதுவாக பெரிய அளவில் பேசப்படும் நிலைக்கு சென்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தை பிரிமியர் ஷோவில் பார்த்தவர்கள் தங்களுடைய ரிவ்யூக்கள்,  நேர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால்  படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நூறு சாமி படத்தை பார்த்த  இயக்குனர் சுதா கொங்கரா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.. அவர் கூறிய கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில், அந்த நாள் பிரிமியர் ஷோக்கு நான் போனப்போ நான் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன்… படம் உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க, பிடிக்கலனா அதையும் சொல்லுங்க… அடுத்த படம் இன்னும் நல்லா பண்ணிக்கிறேன் என்று ..


அதுக்கப்புறம் தனஞ்சயன் சார் என்ன சொன்னார்னா… படம் முடிஞ்ச உடனே நீங்க அங்க இருக்கக்கூடாது. இல்லனா எல்லாரும் உங்க முன்னாடி நல்லா பேசுவாங்கன்னு… அதனால என்னை வெளியே கூட்டிட்டு போயிட்டாங்க.

2 மணி நேரத்துக்கு பிறகு எனக்கு நிறைய போன்கள் வந்துச்சு… சிலர் அழுதுட்டு பேசினாங்க… ‘உங்க படம் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு சொன்னாங்க… நான் கூட அப்போ அழுதுட்டேன்.

இந்த படம் ஹிந்தில தான் வேலை செய்யும்னு சொன்னாங்க… தமிழ்ல வேலை செய்யாது சொன்னாங்க… ஏ சென்டர் படம் மட்டும் சொன்னாங்க… ஆனால் இப்போ எல்லா இடத்துலயும் படம் ஓடுது. 

இந்த படம் ஹிட் ஆகுறதுக்கு காரணம் நீங்க தான்… பிரஸ், ஆடியன்ஸ் எல்லாரும் சேர்ந்து தான் இதை பெரியதாக மாற்றினீங்க. 

 ஆடியன்ஸ் இல்லாம எந்த படமும் இல்லை… நீங்க பேசினா தான் படம் உயிர் பெறும்… இந்த படம் அதையே எனக்கு புரிய வைத்தது… தேங்க்யூ சொல்றதுக்கே  கண்ணீர் வருது என ரொம்பவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement