• May 08 2024

தமன்னா காவாலயா பாடலுக்கு சூப்பரான ஆட்டம் போட இந்த இரண்டு ஹீரோக்களும் தான் காரணமாம்?- அவங்க வீட்டுக்கே போய் பழகுவாரா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் கலந்த டார்க் காமெடி திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

 மேலும் மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் தமன்னா ஆடியா காவாலயா என்னும் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.


சின்னத்திரை பிரபலங்கள் முதல் சோசியல் மீடியா பிரபலங்கள் வரை பலரும் இந்த பாடலுக்கு தான் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட இந்த பாடல் பயங்கர பேமஸ் ஆகி இருக்கிறது.

பொதுவாகவே தமன்னா சிறப்பாக டான்ஸ் ஆடக்கூடியவர் என்பது யாவரும் அறிந்ததே.தமன்னா டான்ஸ் சிறப்பாக டான்ஸ் ஆடுவதற்கு நடிகர் விஜய் மற்றும் பிரபுதேவா தான் காரணமாம்.

அதில் விஜய்யின் நடன திறமையை பற்றி அனைவருக்கும் தெரியும். டான்ஸ் என்றாலே விஜய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் பயங்கர எனர்ஜியோடு ஆடுவார். அவரிடமிருந்து தான் தமன்னா நடன அசைவுகளை தெரிந்து கொண்டாராம். இவர்கள் இருவரும் சுறா படத்தில் இணைந்து நடித்த போது டான்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தமன்னா கற்றுக் கொண்டாராம். இவருக்கு அடுத்தபடியாக பிரபுதேவாவும் தமன்னாவுக்கு டான்ஸ் ஆட சொல்லிக் கொடுத்திருக்கிறார்.


இவர்கள் இருவரும் தேவி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த நட்பின் அடிப்படையிலேயே தமன்னா இப்போது கஷ்டமான நடன அசைவுகள் இருந்தால் உடனே பிரபுதேவாவின் வீட்டிற்கு சென்று விடுவாராம். அங்கு அவரிடம் நன்றாக ஆட ப்ராக்டிஸ் செய்து கொண்டு தான் ஷூட்டிங் செல்வாராம். இப்படி இந்த இரு ஹீரோக்களும் தான் காவாலா பாட்டில் தமன்னா அட்டகாசமாக ஆடி இருப்பதற்கு பின்னணி காரணமாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement