• May 19 2024

ரம்யா கிருஷ்ணனுக்கு இத்தனை லட்ச ரூபாய் கொடுத்துத்தான் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க வைத்தார்களா..? அம்பலமான உண்மை..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற படங்களை இயக்கி, மிகக் குறுகிய காலத்திலேயே உச்ச இயக்குநராக மாறிய நெல்சன் திலீப் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் 'ஜெயிலர்'. 


இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தாலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ரஜினிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். 


ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிய இந்த திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கின்றது. அத்தோடு வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்ததற்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பள விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு 80லட்ஷம் ரூபாய் கொடுத்துதான் நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.  

Advertisement

Advertisement