• Aug 24 2026

என் வாழ்க்கையில அவளுக்கு இடமே இல்லை.. அப்பாவின் பேச்சை மீறி சரவணன் எடுத்த விபரீத முடிவு!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பாண்டியனைப் பார்த்து மயில் கர்ப்பமா இருக்கிற விஷயம் அக்கம் பக்கத்தில எல்லாருக்கும் தெரியும் அவங்க எல்லாரும் அவளை எப்ப வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருவீங்க என்று கேட்கிறார்கள் என்கிறார். அதைக் கேட்ட சரவணன் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க ஏதும் சொல்லுவாங்க என்றதுக்காக மயிலை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வரப்போறீங்களா என்று கோபமாக கேட்கிறார். 

அதைத் தொடர்ந்து சரவணன் பாண்டியனைப் பார்த்து என்ன நடந்தாலும் அவள் எங்க குடும்பத்தை பொலிஸ் ஸ்டேஷனில விட்டதை மட்டும் மறக்கவே மாட்டேன் என்கிறார். அப்படியே எல்லாரும் கொஞ்ச நேரம் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக சரவணன் அந்தக் குழந்தைக்குத் தேவையான எல்லாத்தையும் தான் செய்வேன் ஆனா, அவளை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்.


பின் எனக்கு அஞ்சலியை ரொம்ப பிடிக்கும் அவளோட சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன், ஆனா அப்பா தான் அந்தக் கல்யாணத்தை வேணாம் என்றார். அதை நான் கேட்டேன்.. இப்ப சொல்லுறேன் என்னோட வாழ்க்கையில மயில் வேண்டாம் என்கிறார் சரவணன். 

மறுபக்கம் மீனா ராஜியைப் பார்த்து மயிலோட அப்பா, அம்மா தாங்கள் செய்யுற விஷயத்தை கொஞ்சம் ஜோசிச்சு பண்ணாலே மயில் அக்கா வாழ்க்கை நிம்மதியா இருக்கும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 



Advertisement

Advertisement