• May 05 2024

எனக்கென யாருமில்லையே!- அனிருத்திற்கு இத்தனை காதல் தோல்வியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அனிரூத். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் ரஜினி கமல் அஜித் விஜய் எனப் பல பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

இது தவிர தற்பொழுதும் பல திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.இதனால் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.ஒரு புறம் பிரபல்யமான பிரபலமாக இருந்தாலும் பல நடிகைகளுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகின்றார். அப்படி இவரிடம் மயங்கிய ஐந்து நடிகைகள் பற்றி இங்கு காண்போம்.


பிரியா ஆனந்த் 

எதிர்நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது  இவர் அனிருத்திடம் தன் காட்சிகள் வரும்போது பின்னணி இசை சிறப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்காகவே காத்திருந்த அனிருத்தும் சூப்பரான இசையை கொடுத்து அவரை கவர்ந்திருக்கிறார். இப்படி ஆரம்பித்த அவர்களுடைய நெருக்கம் சில வருடங்கள் நீடித்தது என கூறப்படுகின்றது.

பூஜா குமார்

45 வயதாகும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே இவருக்கும் அனிருத்துக்கும் ஒரு தொடர்பு இருந்தது. உறவினர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

ஆண்ட்ரியா 

நடிகையாகவும், பாடகி ஆகவும் இருக்கும் இவர் அனிருத்துடன் படு நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட மீடியாவில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாத இவர்கள் இருவரும் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக ஷ பிரிந்து விட்டனர்.


ஸ்ருதிஹாசன் 

ஏற்கனவே பிரபல நடிகரை காதலித்து விரக்தியில் இருந்த இவர் அனிருத்துடன் பழகி இருக்கிறார். நட்பாக ஆரம்பித்த அந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. அந்த வகையில் சில வருடங்கள் உறவில் இருந்த இவர்கள் பின்பு பிரேக் அப் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகின்றது .

கீர்த்தி சுரேஷ் 

அதுவரை வயதில் மூத்த நடிகைகளை கரெக்ட் செய்து வந்த அனிருத் தன்னை விட சிறியவரான கீர்த்தி சுரேஷை காதலித்தார். இருவரும் பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொள்வது, ஊர் சுற்றுவது என்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இப்போது சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement