• May 18 2024

எதிர் நீச்சல் சீரியலில் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்- அடடே இவர் எக்ஸ்பிரஷன் குயின் ஆச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட சில காலங்களிலேயே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் நன்கு ரீச் ஆகியுள்ளது.

திருமணமான பெண்கள் தமது கனவுகளுக்காக எப்படி எல்லாம் போராடுகின்றார்கள் என்பதனை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.மேலும் இந்த தொடரில் பிரபலங்கள் பலர் நடித்து வருவதோடு மக்களிடம் நன்கு ரீச் ஆகியும் உள்ளது.


இந்த தொடர் மூலம் சீரியலில் நடிக்க வந்துள்ளார் கனிகா. இவரைத் தொடர்ந்து பிரியதர்ஷினி, ஹரிபிரியா போன்ற நாயகிகளும் நடிக்கிறார்கள்.அத்தோடு திருமணத்திற்கு பிறகும் நல்ல விடயங்கள் செய்ய வேண்டும் என்று இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

தற்போது இந்த தொடரில் புதியதாக டான்சர் ஹேமா டயால் நடிக்க இருக்கிறாராம். இவர் தனுஷின் ரகிட ரகிட பாடலில் இவரது நடனம் மற்றும் கியூட்டான முக பாவனைகளை பார்த்து ரசிகர்கள் நிறைய மீம்ஸ் போட்டு வந்தனர்.இப்போது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement