• May 10 2024

நடிகர் விஜய் ஆண்டனியின் வள்ளிமயில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த சுக்ரன் திரைப்படத்தில் இசை அமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி.

இவர் அமைத்த இசைகளில் ஆத்திச்சூடி, டைலாமோ, நாக்குமுக்கா பாடல்கள் இவரை சிறந்த இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கின்றது . இவருடைய பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பரவி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

இசையில் மட்டுமன்றி நடிப்பிலும் தன்னுடைய கை வரிசையை காட்டி வருகின்றார்.இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வள்ளிமயில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா புகழ் சுனில், தம்பி ராமையா, அறந்தாங்கி நிஷா, சிங்கம்புலி ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1980களின் பின்னணியில் உருவாகும் கதையை மையமாக வைத்து உருவாகி வருகின்றது .

திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என கூறப்படுகின்றது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது .

தற்போது கொடைக்கானல், தேனி, காரைக்குடி, பழனி ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத் திரைப்படத்தின் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றது.

அந்தவகையில் வள்ளிமயில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டி இமான் பகிர்ந்துள்ளார்.மேலும் "விஜய் ஆண்டனி சத்யராஜ் மற்றும் பிரியா அப்துல்லா நடித்துள்ள வள்ளிமயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்வதில் மகிழ்ச்சி சுசீந்திரன் இயக்கத்தில் தாய் சரவணன் நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் கடவுளைப் போற்றுங்கள் என எழுதியுள்ளார்"

Advertisement

Advertisement

Advertisement