• May 17 2025

வெற்றிப்படமாக களத்தில் வந்த ‘டூரிஸ்ட் பாமிலி’.!– சசிகுமாரை ரஜினி புகழ்ந்த அதிரடித் தருணம்!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டூரிஸ்ட் பாமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் பாராட்டு வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. குடும்பக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், சசிகுமாரின் ஆரம்ப வெற்றிக்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை உணர்வு பூர்வமாக்கும் வகையில் திரைக்கதையை நகர்த்தியுள்ள இந்த படம், சினிமா விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ‘பிளாக்பஸ்டர் ஹிட்’ எனக் கருதப்படுகிறது.

இந்த வெற்றியின் முத்திரையை மேலும் உறுதி செய்தது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பாராட்டு. தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த சந்தோஷத்தை பகிர்ந்த சசிகுமார், "‘படம் சூப்பர்’ என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்தினை  சொல்லவா வேண்டும்?" எனப் பகிர்ந்துள்ளார்.


ரஜினி கூறியதாவது, “தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க சசிகுமார். சொல்ல வார்த்தையே இல்ல. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதை தேர்வு வியக்க வைக்குது!” என்றார். இந்த வார்த்தைகள் சசிகுமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான அங்கீகாரம் என்றே கூறலாம். இதுவரை ‘அயோத்தி’, ‘நந்தன்’ போன்ற படங்களுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி, தற்போது ‘டூரிஸ்ட் பாமிலி’ படத்திற்கு பாராட்டு கொடுத்திருக்கிறார் என்பது முக்கியமான விடயமாகும்.

Advertisement

Advertisement