• Apr 28 2024

விஜய் டிவியில் திடீரென மாற்றப்பட்ட பிரபல சீரியலின் டைட்டில்- அதுக்குள்ள டைட்டிலே மாத்தியாச்சா?- இது என்ன புதுடுவிஸ்டாக இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்து வருகின்றது.அதிலும் சன்டிவி, விஜய் டிவி, ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றன.

பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இலகுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர்.அத்தோடு இதில் புதுப்புது சீரியல்களும் ஆரம்பித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஆகா கல்யாணம், பொன்னி போன்ற சீரியல்கள் ஆரம்பமாகியுள்ளன.


இதனை அடுத்து விக்ரம் வேதா என்னும் புதிய சீரியல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது. காதல் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பகவுள்ளது என்பதை ப்ரோமோவைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.

இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் வேதா என பெயரிடப்பட்ட இந்த சீரியல் மோதலும் காதலும் என்ற பெயரால் அழைக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடதத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement