• Sep 21 2023

நடிகர் ரஜினிகாந்துடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றில் குறிப்பிட்ட தொகையை பரிசளித்தார்.


அத்துடன் BMW X7 கார் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். அதேபோல இயக்குநர் நெல்சனுக்கு செக் மற்றும் Porsche கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.


மேலும் ஓ.பன்னீர்செல்வம் நாளை காஞ்சிபுரத்திலிருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Advertisement

Advertisement

Advertisement