தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று மிகப்பெரிய சினிமா அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் படத்திற்கு “சிக்மா (SIGMA)” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்கள் முழுவதும் உற்சாகத்துடன் பதிவுகள் பரவுகின்றன.

இப்பதிவுடன், படத்தின் பிரமாண்டமான Title Poster ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் “SIGMA” என்ற வார்த்தையுடன் நடிகர் சந்தீப் கிஷன் ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கின்றார். இந்தப் பதிவுக்குப் பிறகு, ஜேசன் சஞ்சய் ரசிகர்களும் சந்தீப் கிஷன் ரசிகர்களும் இணைந்து #SIGMA என்ற ஹாஷ்டாக்கினை டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.
Listen News!