• Nov 10 2025

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிரடி தடை..? பிக் பாஸ் செட்டை சுற்றிவளைத்த பொலிஸார்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கூறி  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் பிக் பாஸ்  செட்டில் போலீஸ் குவிக்கப்பட்டு அந்த இடம்  பரபரப்பாக காணப்படுகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனில் கால் பதித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.  சமீப காலமாகவே இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வு முறை வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த இடத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


கடந்த சீசன்களை விட இந்த சீசனில்  பங்குபற்றிய போட்டியாளர்கள் சர்ச்சைக் உரியவர்களாக காணப்படுவதாலும், இதனை  சிறுவர்களும் பார்ப்பதால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய  வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.  

மேலும் இம்முறை இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் 18+  பேச்சுக்களை  பேசியதால்  இந்த போராட்டம் மேலும் வலுவடைந்தது .  எனவே இந்த போராட்டத்தின் முடிவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு  தடை வருமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

Advertisement

Advertisement