• Nov 09 2025

தனுசுடன் வாழ்ந்து காட்டிய அக்ஷயா..! நெப்போலியன் வீட்டில் நடந்த விசேஷம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான  நெப்போலியன் மகன் தனுஷுக்கு கடந்த ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.  திருமணத்திற்கு பிறகு  அமெரிக்காவிலேயே தனுஷும் அக்ஷயாவும்  நெப்போலியன் குடும்பத்துடன் செட்டிலாகி சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்கள். 

நெப்போலியனுக்கு  தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் மூத்த மகனான தனுஷுக்கு  தசைச் சிதைவு நோய் ஏற்பட்டது.  இதனால் தன்னுடைய அரசியல், சினிமா என அனைத்தையும் விட்டுவிட்டு  அவருடைய ட்ரீட்மெண்ட்காக  அமெரிக்காவில் குடியேறினார். 

தனது மகன்  தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட போதும்  அவருக்கு தேவையான கல்வி,  திருமணம் போன்றவற்றை  சரியாக கொடுத்தார். அந்த வகையில்  திருமணம் செய்ய  பல போராட்டம் நடந்தது. இறுதியில்  அவருடைய   உறவுக்கார பெண்ணான அக்ஷயாவை திருமணம்  செய்து வைத்தார். 


இந்த திருமணத்திற்கு பிறகு அக்ஷயா தனுஷை பணத்திற்காகத்தான்  திருமணம் செய்தார். அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று பல விமர்சனங்கள் எழுந்தன.  ஆனாலும்  அக்ஷயா தனது முழு விருப்பத்தின்  அடிப்படையில் தான் தனுஷை திருமணம் செய்ததாக தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில்,  தனுஷ் - அக்ஷயா தங்களுடைய முதலாவது ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்கள்.  இந்த கொண்டாட்டத்தில் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  இதன்போது தம்பதியினர் கேக் வெட்டி, மாலையும் மாற்றிக் கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

Advertisement

Advertisement