• Nov 10 2025

திரையரங்கில் பட்டையைக் கிளப்பிய "Dude".! தற்பொழுது ஓடிடியில்.. எப்போது தெரியுமா.?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களை திரையரங்கில் கவர்ந்த “DUDE” திரைப்படம் இப்போது OTT உலகில் நுழைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இப்படம் நவம்பர் 14, 2025 முதல் Netflix தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தச் செய்தி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த அப்டேட்டை பகிர்ந்து வருகின்றனர். “DUDE on Netflix” என்ற ஹாஷ்டாக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான “DUDE” திரைப்படம், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா ஆகியோர் நடித்த காதல்–காமெடி கலந்த இளைய தலைமுறை படமாகும். படம் கடந்த அக்டோபர் 17, 2025 அன்று உலகமெங்கும் வெளியானது. வெளியானவுடன் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரையரங்குகளில் 3 வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் போதே, Netflix OTT வெளியீட்டு தேதி நவம்பர் 14 என படக்குழு அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement