பிரபல இயக்குநரை திருமணம் செய்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஜாய் கிரிசில்டா, அதன் பின்பு தன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளார். இதன் போது மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஷ் ஆக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி, தனக்கும் தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதிக்கும் இடையில் விவாகரத்து விவாதங்கள் போய்க் கொண்டிருப்பதாக ரங்கராஜன் கூறியுள்ளார். இதனால் அவரின் பேச்சை நம்பி லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தினார் ஜாய்.
இதைத்தொடர்ந்து எளிமையான முறையில் ரங்கராஜை திருமணமும் செய்து கொண்டார். அதன் பின்பு ஜாய் கர்ப்பமாகி தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஏற்கனவே பலமுறை கர்ப்பமாகி அதனை அழித்ததாக ஜாய் தனது புகாரில் கூறியிருந்தார்.

எனினும் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில் ஜாய் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்தார். டிஎன்ஏ டெஸ்டில் இது என்னுடைய குழந்தை என்று உறுதியானால் அதனை வாழ்நாள் முழுக்க கவனிப்பேன் என்று தெரிவித்தார். அதன் பின்பு மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி ஸ்ருதி, ஜாய்க்கு பணம் தான் நோக்கம் என்று அவர் கேட்ட கோரிக்கைகளை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது மகனின் கால் விரல்களைப் பிடித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளதோடு கவிதை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த கவிதை பலரின் கவனம் ஈர்த்துள்ளது.
Listen News!