• Nov 10 2025

‘அரசன்’ படத்தின் அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட வெற்றி மாறன்.. என்ன தெரியுமா.?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிம்பு (சிலம்பரசன் T.R.) மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் இணையும் புதிய படம் “அரசன்”, இம்மாதம் நவம்பர் 24ம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் செய்தி வெளியாகிய சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சிம்புவின் ரசிகர்கள், “இது தான் நாங்கள் காத்திருந்த செய்தி!” எனக் கூறி வருகின்றனர்.

வெற்றி மாறன், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றவர். சமூக நிதர்சனங்கள், அரசியல், வன்முறை, மனித உறவுகள் ஆகியவற்றை ஆழமாக சொல்லும் அவரது படங்கள் எப்போதுமே விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன.

மறுபுறம், சிம்பு தனது நடிப்புத் திறமை மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்த விதத்தால் தற்போது தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார். இவர்களின் இணைப்பு பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement