• Nov 09 2025

வடிவேலு கம்பேக் கொடுத்தால்... 20 வருசத்துக்கு அசைக்கவே முடியாது.! முக்கிய பிரபலம் ஓபன்டாக்

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் “காமெடி” என்ற சொல்லே வடிவேலுவுடன் ஒன்றிணைந்தது எனக் கூறலாம். நகைச்சுவை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள வடிவேலு, 90களில் இருந்து 2000ம் வரை ஒவ்வொரு வீட்டிலும் சிரிப்பை விதைத்தவர். அவருடன் திரையில் நடித்த நடிகர்கள் பலரும் இன்று அந்த அனுபவத்தை தங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய வாய்ப்பாக நினைக்கிறார்கள்.


அந்த வரிசையில், பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலு குறித்து பேசிய விதம் இணையத்தில் பெரும் அளவில் வைரலாகியுள்ளது.

முத்துக்காளை கூறியதாவது, “வடிவேலு சார் கூட நடிச்ச எல்லாரும் ஒரு இரும்புத் தூண் மாதிரித் தான். இன்னைக்கும் எனக்கு சோறு கிடைக்குது, பேரு கிடைக்குது என்றால் அதற்கு காரணம் வடிவேல் சார் கூட நடிச்சது தான். அவர் மீண்டும் காமெடியனா நடிக்க ஆரம்பிச்சால் அடுத்த 20 வருசத்துக்கு அவரை அடிச்சிக்க ஆள் கிடையாது... அவர் மனம் மாறி மீண்டும் காமெடியனா வந்தால் நாங்களும் அவர்களோடு நடிப்போம்.....” என்றார். 

இந்த வார்த்தைகள் முத்துக்காளையின் மனநிலையில் வடிவேலு பற்றிய ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துகின்றன. அத்துடன், அவர் கூறிய இந்த வரிகள் ரசிகர்களிடையே மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement