அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் தான் மாஸ்க். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது குறித்த விழாவில் பங்கு பற்றிய விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திற்குப் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. தற்போது மாஸ்க் மற்றும் ஹாய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி ஆண்ட்ரியா பற்றி கூறுகையில் , சின்ன வயசுல பீச்சில் ஒரு சிலையை பார்த்தேன்.அந்த சிலை போலவே ஆண்ட்ரியா இருக்கின்றார். ஒரு விளம்பரம் ஒன்றில் நடித்த ஆண்ட்ரியா மாஸ்க் படம் வரை அப்படியே எப்படி அதை இளமையுடன் இருக்கின்றார் என்று தெரியவே இல்லை. அவர் பெட்ல தூங்குகின்றாரா? அல்லது ஃப்ரிட்ஜில் தூங்குறாரா ? என்று சந்தேகமா இருக்கு.
நாளைக்கு என்னுடைய மகனும் வந்து ஆண்ட்ரியா எப்படி அப்படியே இருக்கின்றார் என்று வியந்து பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
Listen News!