தமிழ் சினிமாவில் புதிய படைப்புகள் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில், கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கும் “மாஸ்க்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசிய ஒரு வரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் சிரித்தபடி, “ஜி.வி. பிரகாஷ் சார் நன்றி… என் படங்களுக்குப் பாட்டுப் போட மறுத்ததற்கு!” என்று கூறியதும், அரங்கம் முழுக்க சிரிப்பில் மூழ்கியது.
“மாஸ்க்” திரைப்படம் ஒரு த்ரில்லர்-டிராமா வகையைச் சேர்ந்த படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். அத்துடன், இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் செய்துள்ளார்.

கவின், சமீபத்தில் “Dada” படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இப்போது அவர் ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிக்கும் இந்தப் படம் மூலம் தனது நடிப்பு திறமையை மறுபடியும் நிரூபிக்கத் தயாராகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி விளையாட்டாக ஜி.வி. பிரகாஷை வம்பிழுத்துப் பேசிய கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!