• Nov 09 2025

'மாஸ்க்' படம் சாதாரண ஹாஸ்ட் படம் இல்லை..! தியேட்டரில் தெறிக்கப்போகுது!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் காணப்படுகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக  கிஸ் படம் வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து மாஸ்க் படம்  எதிர்வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் நேற்று வெளியானது. இந்த படம் கொள்ளை சம்பவத்தை பின்னணியாக கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் வேலு என்ற கேரக்டரில் கவின் நடித்துள்ளார். 

பொதுவாகவே கவினின் படங்கள் என்றால் நகைச்சுவை அல்லது திரில்லர் படமாக  தான் காணப்படும். ஆனால் இந்த படம் வணிக பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது.  இதனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படம் மீது எழுந்துள்ளது. 


மாஸ்க் படத்தில் மோசமான கேரக்டர்களில் நல்லவர்கள் யார் என்பதை ரசிகர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என ஆண்ட்ரியா குறிப்பிட்டு இருந்தார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். எம். ஆர் ராதாவின் முகமூடியை வைத்து கொள்ளையடிப்பது போல் இந்த கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாஸ்க் படம் சாதாரண ஹாஸ்ட் படம் இல்லை.  ஆக்சன், எமோஷன், காமெடி என அனைத்து சமநிலையிலும்  உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படம் தியேட்டரில் மாஸ் என்டர்டைன்மென்ட் ஆகும் என தற்போது சமூக வலைத்தளங்களில்  பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement