• May 09 2024

கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது-குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ். இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் விக்ரம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில்கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

மேலும் இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் புலனாய்வு அதிகாரியாக நடித்திருப்பதாகவும், ஒரு நகரத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை அவர் விசாரிக்கும்போது அதன் பின்னணியில் ஒரு மாபியா கும்பல் இருப்பதை கண்டுபிடிக்கிறார் கமல்.

அதையடுத்து அந்த கும்பலை அவர் எப்படி அழிக்கிறார் என்பதுதான் விக்ரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. அத்தோடு, கமல்ஹாசன் அமர் என்ற ரோலில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்படி என்றால் விக்ரம் வேடத்தில் நடித்திருப்பது யார்? என்று கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

Advertisement

Advertisement

Advertisement