• May 09 2024

டி.இமானின் திருமணம் குறித்து குமுறும் முன்னாள் மனைவி-வித்தியாசமான முறையில் வாழ்த்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்திருந்த நிலையில் அதன் புகைபடங்கள் இணையத்தில் வைரலானது. அவருக்கு பல பிரபலங்கள் கூட பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இவரின் முன்னாள் மனைவி மோனிகா தற்போது திருமண வாழ்த்து சொல்லி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் இமானை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அவர்.

"டியர் டி.இமான். உங்கள் இரண்டாம் திருமணத்திற்காக வாழ்த்துக்கள். ஒருவர் வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்."

"கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை, தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை உன் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் நான் புது குழந்தையையும் பாதுகாப்பேன். Happy married life."

Advertisement

Advertisement

Advertisement