மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது சமீபத்திய வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது துல்கர் சல்மான் நடித்து வரும் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ள படம் 'காந்தா'. இப்படத்தை இயக்கும்வர் செல்வமணி செல்வராஜ். இது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதாலேயே படத்திற்கு தனித்துவம் கிடைத்துள்ளது.
இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. ‘காந்தா’ திரைப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்து வருகின்றன. படத்தை செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 'காந்தா' படத்தில் இருந்து ‘பனிமலரே’ என்ற மென்மையான பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதன் மெலடிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பளித்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற புரொமோஷன்கள் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!