• Jun 07 2026

தவெகவில் இணைந்த சின்னத்திரை நடிகை.! யாருனு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சிங்கள் பசங்க' நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கப் பாண்டியனுடன் இணைந்து ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை சாந்தினி பிரகாஷ். 

இவர் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். சமூக ஊடகங்களில் இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது சாந்தினி பிரகாஷ் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் -2' தொடரில் சுகன்யா என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சுற்றும் விழி சுடரே' தொடரிலும் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சாந்தினி பிரகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உறுப்பினர் அட்டையையும் பெற்றுள்ளார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

சாந்தினி பிரகாஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு, தனது திறமையால் தமிழ் மக்களிடையே நிலையான இடத்தைப் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement