பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூ சாட்டை மாறன் சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் தனது “திரை அமைப்பு” நிகழ்ச்சியில், இயக்குநர் மணிகண்டன் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள 'முத்து என்கின்ற காட்டான்' என்ற தொடரை விமர்சித்துள்ளார்.

இந்த சீரிஸின் கதைக்களம் ஒரு மர்மமான கொலை வழக்கை மையமாகக் கொண்டது. தொடக்கத்தில் ஒரு காட்டுப் பகுதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடைக்கிறது. அது விஜய் சேதுபதியுடையது என தெரியவருகிறது. அதன் அருகில் பணமும், அந்தத் தலையை புதைக்கும் நபர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற கடிதமும் கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை ஆரம்பமாகிறது. ஆனால், விசாரணை முன்னேறும் போது பலரும் பல்வேறு தகவல்களை கூறுவதால் கதை குழப்பமாக மாறுகிறது.
மாறன் தனது விமர்சனத்தில் முக்கியமாக OTT வெளியீட்டு முறையை கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் மூன்று episode-களை மட்டும் வெளியிட்டு, மீதியை பின்னர் வெளியிடுவது பார்வையாளர்களின் அனுபவத்தை பாதிக்கிறது என அவர் கூறியுள்ளார். இதனால் கதையின் flow பாதிக்கப்படுவதுடன், ஆர்வமும் குறைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சீரிஸின் investigation பகுதி மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். போலீஸ் தாங்களாக தேடி கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, தகவல்கள் தானாகவே வந்து கிடைப்பது போல காட்டப்பட்டுள்ளதாக விமர்சித்தார். லாஜிக் பிழைகள் கூட அதிகம் உள்ளதாகவும், குறிப்பாக துண்டிக்கப்பட்ட தலையை சரியாக கையாளாத காட்சிகள் நம்பகத்தன்மையை குறைக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, தேவையற்ற நீளமான காட்சிகள் மற்றும் சம்பந்தமில்லாத விவரங்கள் கதையின் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். கிளைமாக்ஸ் கூட தெளிவான முடிவை தராமல், மேலும் குழப்பங்களை உருவாக்குகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்தத்தில், ட்ரெய்லர் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், முழு சீரிஸ் அதனை பூர்த்தி செய்யவில்லை என ப்ளூ சாட்டை மாறன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரிஸ் மார்ச் 27ஆம் தேதி வெளியாகியுள்ளது.
Listen News!