• May 08 2024

'என்னை விட தயாரிப்பாளர் மகனுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது'-முக்கிய படத்திலிருந்து விலகிய விஜய் ஆண்டனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டிஸ்யூம் என்னும் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் விஜய் ஆண்டனி. இவர் இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் உருவானது.

இதனால் நடிப்பில் ஆர்வம் காட்டிய விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் இசையமைப்பதையே நிறுத்தினார்.இப்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் விரைவில் இந்தி மற்றும் தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து விஜய் ஆண்டனி வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. திரைக்கதையில் தன்னைவிட தயாரிப்பாளர் மகன் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement