• Apr 28 2024

அசல் கோலார் எந்த கோளாறும் பண்ணல- ஜோர்த்தாலே பாடலை ருத்ரன் படத்தில் வைக்க இது தான் காரணம்- நடிகர் ராகவா லாரன்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய  நடிப்பில் அடுத்ததாக ருத்ரன் திரைப்படம் உருவாகி வருகின்றது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குநர் கதிரேசன் ஆகியோர் பிரபல சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர். அதில் படம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கின்றனர்.


இதில், இப்படத்தில் இடம்பெற்ற அசல் கோலாரின் ஜோர்த்தாலே பாடல் பற்றி கேட்டதற்கு பதில் அளித்த நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், “ஜோர்த்தாலே பாடல் வேண்டும் என்று நான்தான் இயக்குநரிடம் கேட்டேன். அந்த பாடல் மிகவும் லோக்கலாக இருக்கும். அந்த அளவுக்கு கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை.


ஏனென்றால் இந்த படத்தில் ஹீரோ கொஞ்சம் கிளாஸாக இருப்பார். அதேசமயம் ஒரு மாஸ் கலந்து ஸ்டைலிஷ் ஆன பாடலாக இந்த பாடலை திரையில் பிரசன்ட் பண்ணலாம் என்று நினைத்தேன். அதை முயற்சி செய்து கொண்டு வந்திருக்கிறோம். அதற்கு அந்த பசங்களும், அசல் கோலாரும் முழுமையாக ஒப்புக்கொண்டனர். அசல் கோலார் எந்த கோளாறும் பண்ணல.” என கலகலப்பாக பேசினார்.ராப் பாடகர் அசல் கோலார், பிக்பாஸ் 6வது சீசன் மூலம் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement