• Jan 19 2025

தளபதி சொன்ன முக்கிய விஷயம் ..... உண்மையை உடைத்த பின் வீட்டுகார நடிகர்....

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் வளர்ந்து  வரும் நடிகர்களில் ஒருவர் யுவன்.  இவரை யுவன் என்று சொல்லி தெரிந்தவர்களை  விட இவரை சாட்டை திரைப்பட அன்பழகன் என்று அறிந்தவர்களே அதிகம் என்று சொல்லும் அளவுக்கு சாட்டை திரைப்படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகினார் . 


 நடிகர் யுவன் ஒரு பேட்டி ஒன்றில் உரையாடும் போது நடிகர் விஜய்யின் வீட்டுக்கு பின் வீடு தான் என்னுடைய வீடு என்றும் விஜய்  அரசியல் வந்தது பற்றி தன்னுடைய  கருத்தையும் கூறியுள்ளார் . வாங்க பார்க்கலாம் , 


"தளபதி விஜய்யின் வீட்டிற்கு பின்பதாக தான் என்னுடைய வீடு இருந்தாலும் நான் அவரோடு போய் கதைப்பது குறைவு , அதனால எனக்கு அவரோடு தனிப்பட்ட ரீதியாக கதைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை . அதே போல் எனக்கு அவரோட  அரை மணித்தியாலம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது . 


விஜய் சார் அவரோட ஆபீஸ்ல இருந்தார் . நான் மெதுவாக கதவை திறந்தேன் . ஹாய் வாங்க என்று சொன்னார் . ஒரு அரைமணி நேரம் கதைத்தேன் . சாட்டை படம் பண்ணினேன் என்று நான் சொன்னன் நல்லா பண்ணுங்க நல்ல கதைகளை தெரிவு செய்து நடிங்க அப்பிடி எனக்கு கொஞ்சம் அட்வைஸ் தந்தார்.


நான் ஒரு தளபதி வெறியன் ,நானும் விஜய்சார்ரும் நிற்கிற மாதிரி ஒரு பிரேம் பெரிசா என்னுடைய ரூம்ல கொழுவி வைத்து  இருக்கிறேன் . அவரோட வீட்டை போய் அவரோட தனியா கதைத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு விஷயம்".என்று மிகவும் மகிழ்ச்சியாக பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement