விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி தனது அம்மாவுக்கு போன் பண்ணி க்ரிஷ் அப்பாவுடைய உறவுக்காரர்களுக்கு இனி கால் பண்ண கூடாது. அவர்களிடம் பேசக்கூடாது, அப்படி என் பேச்சை மீறி நீ நடந்தால் ஊருக்கே சென்று விடு என்று திட்டுகின்றார்.
இதை தொடர்ந்து விஜயா குடும்பத்தார் பாட்டி ஊருக்குச் செல்லுகின்றார்கள். அதே நேரத்தில் ரோகிணியின் குடும்பத்தினரும் மகேஸ்வரியுடன் அவருடைய ஊருக்கு செல்லுகின்றனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு கிலோமீட்டர் அருகாமையிலேயே இருக்கின்றனர்.

மகேஸ்வரி ஊருக்கு வந்த விஷயத்தை போன் பண்ணி ரோகிணிக்கு சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்த மந்திரவாதி ஒருவர் எதற்காக இங்கு வந்தாய்? திரும்பி சென்று விடு என்று எச்சரிக்கின்றார். இதனால் மகேஸ்வரி பயப்படுகின்றார்.
அதே நேரத்தில் முத்துவுமும் மீனாவும் கோயிலில் இருக்கும் போது அங்கு வந்த அதே மந்திரவாதி மீனாவிடம் எதற்காக நீ இங்கு வந்தாய்? சென்று விடு, உன் வாழ்க்கையே சறுக்க போகிறது என்று அவரையும் எச்சரிக்கின்றார். இதனால் மீனா பயப்படுகிறார்.
இறுதியாக ஸ்ருதி பாட்டியிடம் விஜயாவை வேலை வாங்குமாறு சொல்ல, அவர் விஜயாவை நடனம் ஆட வைக்கின்றார் . இதனால் பாட்டி வீடு குதூகலமாக காணப்படுகிறது. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!