• Apr 01 2023

பாண்டவர் இல்லம் சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை.... காரணம் இது தானா!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

 சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம் ஆகும்.

இந்த தொடர் மதியம் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடிக்கிறார்கள். பாண்டவர் குடும்பத்திற்கும், ஜமீன் குடும்பத்திற்கும் காலம் காலமாக பகை இருந்து கொண்டு வருகிறது. 

இரு குடும்பத்தின் கதையை மையமாக வைத்து இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது. மேலும், அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடர். இந்த பாண்டவர் இல்லத்தை ஐந்து மருமகள்களும் எப்படி பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான்  கதை.தற்போது பல திருப்பங்களுடன் தொடர் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

மேலும், இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை அனு.  சின்னத்திரை சீரியலின் மூலம் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். 

தற்போது இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இதனிடையே இவர் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அணு சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கழித்து அனு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.  இந்த நிலையில் சமீபத்தில் அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இதை அவரே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அனு திடீரென்று சீரியலில் விலகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, பாண்டவர் இல்லம் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அனுவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பாண்டவர் இல்லம் சீரியலின் நடிகர்கள் அனைவருமே பிரியாணி விருந்து வைத்து அவரை வழி அனுப்பி வைத்திருக்கின்றனர். 

தற்போது அந்த வீடியோவை தான் நடிகை கிருத்திகா சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement