• Mar 23 2023

'பாக்கியலட்சுமி' சீரியலில் புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல சினிமா நடிகர்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

சீரியலுக்கு பேர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதுமட்டுமல்லாது இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் தான் இருந்து வருகின்றன.

அவ்வாறான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது பாக்கியா இங்கிலீஸ் கிளாசில் இணைந்திருக்கின்றார். மேலும் மறுபுறம் கோபி தனது மனைவி ராதிகாவிடமும், மகள் இனியாவிடமும் படாதபாடுபட்டு வருகிறார்.


இவ்வாறு விறுவிறுப்பான கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புதிதாக ஹீரோ ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி வந்த நடிகராக இருந்து வந்த ரஞ்சித் தான்.


இவர் தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்னதாக இவர் ஏற்கனவே செந்தூரப்பூவே எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement