• May 19 2024

தீக்குழியில் விழுந்த சிறுமி... பதறிய பெற்றோர்... சிறுமியை காப்பாற்ற தீக்குழியில் இறங்கிய பொன்னி... இனி நடக்கப்போவது என்ன... பொன்னி சீரியல் ப்ரோமோ...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


பொன்னி  மாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று இருக்கிறாள் அப்போது அந்த கோவிலில் தீமிதிப்பு திருவிழா நடைபெற்று கொண்டு இருக்கிறது ஏராளமான பக்தர்களும் வருகை தந்துள்ளனர். அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து அங்கு இருந்த ஒரு சிறுமியின் மீது கைப்பட அவள் தடுமாறி தீ குழியில் விழுந்து விடுகிறாள். 


அதனை பார்த்து எல்லாரும் பதறி கத்துகின்றனர். அப்போது அங்கு வந்த பொன்னி பதறியோடி தீகுழியில் இறங்கி அந்த சிறுமியை காப்பாற்றுகிறாள். இடத்தோடு இந்த சீரியல் ப்ரோமோ முடிகிறது. அந்த சிறுமி யார் , பொன்னியால் காப்பாற்றபட்ட சிறுமிக்கு என்ன ஆனது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement