• Sep 19 2024

விஜய் சேதுபதியின் படத்திற்கு இசையமைப்பாளரின் பெயரை வைத்த படக்குழுவினர்…அவரையும் விட்டு வைக்கலயா?..கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. 2010 இல் 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் இதற்கு முன்னரும் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் நடிகராக அறிமுகமான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஒருவராகவும் மாறியிருக்கின்றார். இவ்வாறு திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்து வரும் இவர் தற்போது தனது 46-ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இப்படத்தினுடைய படப்பிடிப்புகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தினை வெளியிடுவதற்கும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தற்போது இப்படம் தொடர்பாக மற்றுமோர் செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்திற்கு இதுவரை காலமும் பெயர் வைக்கப்படாத நிலையில் தற்போது "DSP " என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த ரசிகர்கள் மியூசிக் டிரெக்டெர் ஐ கூட விட்டு வைக்கலயா எனக் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு காரணம் பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தையும் ரசிகர்கள் DSP என்றே அழைத்து வருகின்றமை ஆகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement