சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் டான். இப்படம் கடந்த மே 11ம் திகதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலை வாரி இறைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, SK 20 படத்தில் நடித்துவருகின்றார். இப்படத்தை அனுதீப் இயக்கிவருகின்றார். தற்போது இந்தப்படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் இந்த படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்படுள்ளது.
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
முதன்முறையாக தீபாவளி அன்று வெளியாகும் சிவகார்த்திகேயன் படத்துடன் கார்த்திக்கின் சர்தார் திரைப்படம் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- உதட்டில் முத்தம் கொடுக்க போகும் காஜல்-அவரே வெளியிட்ட புகைப்படம்..!
- மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் நம்ம சிவகார்த்திகேயன்- எந்த படத்திற்கு தெரியுமா..?
- “அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!