• Jan 19 2025

சமந்தா செய்த டார்ச்சரால் கதறி அழுத சின்மயி.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாக பாடகி சின்மயியை நடிகை சமந்தா டார்ச்சர் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா மற்றும் பாடகி சின்மயி ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் சமந்தா சென்னை வரும் போதெல்லாம் சின்மயி வீட்டுக்கு தவறாமல் வருகை தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பாக சமந்தா கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமந்தாவுக்கு எதிராக பலரும் பேசினார்கள். ஆனால் சின்மயி கணவர் ராகுல் மட்டும்தான் சமந்தாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமந்தா நடித்த பல திரைப்படங்களுக்கு பாடகி சின்மயி தான் பின்னணி குரல் கொடுத்திருப்பார் என்பதும் சமந்தாவின் குரல் போலவே அச்சு அசலாக சின்மயி பேசி அசத்தியிருப்பார் என்பது ஒரு குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் சின்மயி மற்றும் சமந்தா ஆகிய இருவரும் காமெடியாக பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சமந்தா தன்னை டார்ச்சர் செய்வதாகவும், புல்லிங் செய்வதாகவும் அழுவது போல் நடிக்க, அதை பார்த்து சமந்தா விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement