• May 04 2024

ரஜனியின் படத்தில் நடிக்க ஆசை-இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி.. தீவிர தேடுதலில் போலீசார்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்துக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தருகிறேன் என்று இளம் பெண்ணிடம் ஆசை காட்டி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கும் தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. எனினும் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

எனினும் இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ரஜினியின் படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு தருவதாக  கூறி இளம் பெண்ணிடம் ஆசை காட்டி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கும் தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில்  படு வைரல் ஆகி வருகிறது.

சமீபகாலமாகவே படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல பெண்களிடம் ஆசை காட்டி லட்ச கணக்கில் பணம் மோசடி செய்யும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும் அந்த வகையில் மும்பையை சேர்ந்த நிலேஷா என்ற பெண்ணிடம் பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற இரண்டு பேர் பட வாய்ப்பு வாங்கி தருவதாக அணியிருக்கிறார்கள். அவர்கள், நாங்கள் ஹைதராபாத் சேர்ந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள்.

அத்தோடு நாங்கள் தான் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர், ஆர் சி 15 போன்ற படங்களை தயாரிக்க இருக்கிறோம். மேலும் இந்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் மகள் வேடத்தில் நீங்களே நடியுங்கள். அது கிடைக்கவில்லை என்றால் சைபர் ஹேக்கர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்.மேலும், படம் குறித்து அந்த பெண்ணிடம் போலி ஆவணங்களையும் அந்த நபர்கள் கொடுத்திருக்கின்றனர். மேலும் அந்த பெண்ணும் அவர்கள் சொன்னதை நம்பிவிட்டார்.

பின் ஜூலை மாதம் போன் மூலம் அந்த நபர்கள் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்ட ரீதியான காரணங்களுக்கு பணம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். உடனே அந்த பெண்ணும் 10 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். பணம் கொடுத்த சில நாட்களில் அந்த பெண் அந்த நபர்களை தொடர்பு கொண்டு இருக்கிறார். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின் தான் அவர்கள் தன்னை ஏமாற்றி இருப்பதை அந்த பெண் உணர்ந்தார்.

எனினும் இதனை அடுத்து நிலேஷா மும்பை தகிசர் போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீசாரும் அந்தப் பெண் அளித்த புகாரியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது. அப்போதுதான் அந்த இருவருமே ஏற்கனவே இருக்கும் கம்பெனி பெயரை சொல்லி இரண்டு முறை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அத்தோடு வெங்கடேஸ்வர கிரியேஷன் பட தயாரிப்பு கம்பெனி 2003 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டு பல தெலுங்கு படங்களை தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement