• Sep 21 2024

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப்போகும் பிரபல இயக்குநர்-வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்து பட்டையை கிளப்பினார்.

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதற்கு பிற்கு பல படங்கள் ஹிட் கொடுத்த இவர் நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்யார் சிவகார்த்திகேயன்.

தற்போது தொடர்ந்து இரண்டு ரூ. 100 கோடி வசூல் செய்த படங்களால் டாக்டர் மற்றும் டான் அமைந்துள்ளது.சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்தாக அவர் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் படமும் சூப்பர்ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் அதே போல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. 21 உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அத்தோடு இப்படத்தின் தலைப்பு வெளியீடு வீடியோ இரு தினங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அத்தோடு இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக கவுண்டமணி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல முன்னணி இயக்குனர் மிஷ்கின் கமிட்டாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement