• May 06 2024

வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையைக் கைப் பற்றிய பிரபல நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்ஸ்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தில் ஹீரோயினாக சித்தி இதானி, அம்மாவாக ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் ஷுட்டிங் பணிகள் முடிந்து ரிலீஸிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அத்தோடு இப்படம் இந்தப் படம் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டீசர், பாடல்கள், போஸ்டர்கள் ஆகியன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக சிம்பு, தனது அப்பா டி.ராஜேந்தரின் ட்ரீட்மென்டிற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு தான் படத்தின் வேலைகளில் ஈடுபட உள்ளார்.

சிம்பு இம்மாத மத்தியில் தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் கைப்பற்றி உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்று அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் தானும் இணைந்துள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையுடன் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement