• May 04 2024

மார்க்கெட் குறைந்தாலும் ஹீரோவாகத் தான் நடிப்பேன்; பிடிவாதம் பிடிக்கும் காமெடியன்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'படையப்பா' படத்தில் ரஜனியைப் பார்த்து நீலாம்பரி ரம்யா கிருஸ்ணன் "வயசு போனாலும் ஒனக்கு ஸ்டைலு போகவில்லை" என்பார். அது போலத் தான் காமெடி நடிகர் சந்தானமும் தனக்கு மார்க்கெட் குறைந்தாலும் ஹீரோவாகத் தான் தொடர்ந்தும் நடிப்பேன் எனப் பிடிவாதம் பிடிக்கின்றார்.

தமிழ் சினிமா உலகில் காமெடியனாக பிரகாசித்தோரில் வடிவேலுவும் ஒருவர். தனக்கென ஒரு பாணியை வகுத்த அவரின் உடல்மொழி கூட ரசிகர்களை மகிழ்வித்தது. ஏராளமான குழந்தை ரசிகர்கள் கூட வடிவேலுவுக்கு உள்ளனர். சமூக வலைத்தளங்களில் கூட வடிவேலுவை வைத்து உருவான மீம்ஸ்கள் தான் பிரபலமானவை. விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்' படத்தில் காண்ட்ராக்ரர் நேசமணியாக வந்த வடிவேலுவுக்கு சுத்தியல் தலையில் விழும் காட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமாக இருந்தது.

இந்நிலையில் இயக்குநர், தயாரிப்பாளர்களிடம் கடுப்பாக நடந்து வடிவேலுவின் மார்க்கெட் அவ்வப்போது டல்லாகியது. ஆனாலும் அண்மைக் காலங்களில் மீண்டும் மார்க்கெட்டைப் பிடித்து வருகின்றார். காமெடியர்கள் ஹீரோவாக மாறியது போல சந்தானமும் ஹீரோவாக மாறினாலும் அண்மைக் கால அவரது படங்கள் தயாரிப்பாளர்களின் கையைக் கடித்து விட்டன. படம் சம்பந்தப்பட்ட விடயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ரொம்பவே…. கடுப்பாயிட்டாங்க. நீங்களும் இதே ஸ்பீடில போனால் நம்ம வடிவேலு சாரைப் போல ஆயிடுவீங்க என்கிறாங்க.

மிஸ்டர் சந்தானம் சார் சினிமாவில இதெல்லாம் புரியாம ஏன் சார் பீல்டில இருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க சார் … என்கிறாங்க .புரியுமா. ஹீரோக் கனவைக் கலைச்சிட்டு வாங்க பணம் சம்பாதிக்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement