• Apr 15 2026

மீனாவை வாயடைக்கச் செய்த பாண்டியன்.. குமார் வாழ்க்கையில் நிகழும் அதிரடித் திருப்பம்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, அரசி மீனாவுக்கு போன் எடுத்து அப்பா பேசின கோபத்தில அம்மா இன்னும் சாப்பிடாமலே இருக்கிறாங்க நீங்க கொஞ்சம் போன் பண்ணி சொல்லுவீங்களா என்று கேட்கிறார். அதுக்கு மீனா நான் நேரிலேயே வந்து கதைக்கிறேன் என்கிறார். அந்த நேரம் குமார் அரசியை பார்த்துக் கொண்டிருக்கிறதைப் பார்த்த காந்திமதி எதுக்காக அந்தப் பிள்ளையை பார்க்கிற என்று கேட்கிறார்.

மேலும், வேற கல்யாணம் செய்யுறதில உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார் காந்திமதி. அதுக்கு குமார் மனசில ஒருத்தியை வைச்சுக் கொண்டு எப்புடி வேற ஒரு கல்யாணம் பண்ணுறது என்கிறார். அதனை அடுத்து கோமதி மீனா கிட்ட நடந்ததெல்லாத்தையும் சொல்லிப் புலம்புறார். பின் மீனா பாண்டியனைப் பார்த்து எதுக்காக அத்தை மேல கோபத்தைக் காட்டுறீங்க என்று கேட்கிறார். 


அதுக்கு பாண்டியன் உன்மேல கோபப்படாமல் இருக்கிறேதே போதும் அடுத்தவங்களுக்காக பேசாத என்று மீனாவைப் பார்த்துச் சொல்லுறார். மறுபக்கம், மயில் வயசான அம்மாவை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து முத்துவேல் வீட்ட குமாரை பார்க்கிறதுக்காக பொம்பிள வீட்டுக்காரங்க போய் நிற்கிறார்கள். 

அப்ப சக்திவேல் நிச்சயதார்த்தத்தை உடனே வைக்கலாம் என்கிறார். அதுக்கு பொம்பிள வீட்டுக்காரரும் சம்மதிக்கிறார்கள். அதனை அடுத்து மயில் பாக்கியத்தைப் பார்த்து எனக்கு வேலை வாங்கிக் கொடுக்க சொல்லி மீனாவைக் கேட்டிருந்தேன் அங்க தான் போய்ட்டு வாறன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement