உலக தாய்மொழி தினமான இன்று (பிப்ரவரி 21) பலரும் தங்கள் தாய்மொழியின் மகத்துவத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், உலகநாயகன் கமல் ஹாசன் தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தமிழுக்கும் தாய்மொழிக்கும் உரிய மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது உணர்ச்சிபூர்வமான வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி, தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

கமல் ஹாசன் தனது பதிவில், “மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி. உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதில் சிந்தித்து இருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கு என் தாய்மொழி என்றும் சுவாசம். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிகள் சாதாரண வாழ்த்துச் செய்தியாக அல்லாமல், மொழியின் உயிர்த்தன்மையைப் பேசும் கவிதைநயம் கொண்ட சிந்தனையாக அமைந்துள்ளது. தாய்மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் அல்ல; அது ஒருவரின் அடையாளம், உணர்வு, சிந்தனை மற்றும் வாழ்வியலின் அடித்தளம் என்பதைக் கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
Listen News!