• Apr 15 2026

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சீயான்..4 வித்தியாசமான கதைகள்.. - விக்ரமின் மாஸ்டர் பிளான்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்புத் திறன், கதாபாத்திரத் தேர்வு மற்றும் அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விக்ரம் சமீபத்திய பேட்டியில் வெளியிட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 


அவர் அதன்போது, “சில நேரங்களில் அமைதி என்பது நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் காலம். என்னை ஈர்க்கும் கதைகள் வருவதற்கு நான் ஒரு வருடம் காத்திருந்தேன். நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்களுடன் 4 படங்கள் நடிக்க உள்ளேன். அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைகள்.” என்று அவர் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிக் கொண்டிருந்த விக்ரம், கடந்த சில வருடங்களாக திரை உலகில் குறைவாகவே தோன்றினார். இதனால் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவர் தற்போது கூறியுள்ள விளக்கம், அந்த அமைதிக்குப் பின்னால் இருந்த திட்டமிடலை வெளிப்படுத்துகிறது. 

Advertisement

Advertisement