• May 03 2026

ரஜினியை இயக்க எனக்குத் தகுதி இல்லையா? - வைரலாகும் சுந்தர் சியின் அதிரடிக் கருத்து.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சுந்தர் C சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் நடித்த பட வாய்ப்பில் இருந்து விலகியதற்கான காரணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது அவருக்கே ஒரு பெரிய சந்தர்ப்பமாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தாமல் விலகியதற்குப் பின்னால் இருந்த உண்மை காரணத்தை தற்போது விளக்கியுள்ளார்.


அவர் கூறுகையில், “உண்மையில் சொல்லப்போனால், அந்த படத்தில் எனக்கு அதிகமான அழுத்தம் இருந்தது. நான் இதுவரை எடுத்த படங்கள் எல்லாம் என்னுடைய விருப்பப்படி எடுத்தவை. மக்களுக்கு பிடிக்கும் என நான் நினைத்ததை செய்து வந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய படத்தை இயக்கும் போது அது ஒரே நபரின் முடிவாக இருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்த அளவிலான பெரிய திட்டத்தில் பலரின் எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த சூழலில் நான் அந்த ப்ராஜெக்ட்டுக்கும், வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் முழுமையாக உண்மையாக இருக்க முடியவில்லை என்று உணர்ந்தேன். அதனால் தான் விலகுவது சரியான முடிவாக எடுத்தேன்.” என கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த முடிவுக்கு ரஜினிகாந்தோ அல்லது கமல்ஹாசன் காரணமில்லை என்றும், ரஜினியிடம் நேரடியாக தெரிவித்து விட்டு தான் விலகியதாகவும் சுந்தர்.சி தெளிவுபடுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement